Haikoo
துளசிச் செடி
சுற்றிலும் வண்ணக்கோலம் எல்லோரும் வணங்கிய வண்ணம்
மாடத்தில் வாடிய துளசிச் செடி!!
---------------------------------------------------------------------------------
வலி!!
70 கி.மீ வேகம்
மேலே இடித்தது பட்டாம்பூச்சி
வலித்தது என் உடலும் மனதும்!
---------------------------------------------------------------------------------
கால ஏணி!!
வாழ்க்கைப் படிகளில் ஏறுகிறோம்
என்று நினைத்து இருக்கிறோம்
காலஏணியில் வழுக்கி விழுவது தெரியாமல்!!
----------------------------------------------------------------------------------
கண்ணீர்த்துளி!!
கண்ணீர்த்துளிகள் உப்புக்கரிக்கும் என்று யார் சொன்னது?
உன்னைப்பற்றிய நினைவலைகளால் பெருகிய கண்ணீர்
எனக்கு இனிக்கின்றது!!
---------------------------------------------------------------------------------------
பொய்க்கோபம் !!
உன் பொய்க்கோபம் என்னை
சாம்பலாக்கினாலும் மீண்டும் துளிர்ப்பேன்
உன் அடுத்த அன்பு மழையில்!
---------------------------------------------------------------------------------------
மீன்குஞ்சு !!
மழைமேகம் வெகுதொலைவில் இருந்தாலும்
என்றாவது ஒருநாள் பொழியும் என்ற காரணத்தால்
இறுகிய சகதிக்குள் புதைந்துகிடக்கிறேன் மீன்குஞ்சுகளாய்!!
---------------------------------------------------------------------------------------------
சுவாசம்!!
சுவாசிக்க நான் மறந்தாலும் இறக்க மாட்டேன்!
உன்னைப்பற்றிய எண்ணங்கள்
என் சுவாசமாக இருக்கும்பொழுது!
------------------------------------------------------------------------------------------------

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home