Nenjil Vandhu Senravai

Thursday, July 9, 2009

இலவம் பஞ்சு முகம் !!

மனிதராய் பிறந்தால் பல உணர்ச்சிகளுக்கும் உணர்வுகளுக்கும் அவ்வப்பொழுது ஆட்பட நேரிடும் . குழந்தை முதல் சந்நியாசி வரை இவைகட்கு ஆட்படாதவர்களே இருக்க முடியாது. இந்த உணர்ச்சிகளின் விளையாட்டை கற்பனை செய்து பார்த்த பொழுது விளைந்த சில பதங்களே இவை!!
=======================================================
உன் உதடுகள் அசையவில்லை;
ஆனாலும் தேனாய் உன் குரல் எனக்குள்!
நீ என் அருகில் இல்லை;
ஆனாலும் உயிராய் நீ எனக்குள்!
நினைவுக் கரைகளைத் தாக்கி
உன்னைப் பற்றிய எண்ண அலைகள்
எனக்குள் மீண்டும் மீண்டும்!!
இலவம் பஞ்சாய் உன் முகம்
என் கண் முன் நிதம் நிதம்!!!

Sunday, July 5, 2009

பிரார்த்தனை

இந்த வரிகள் ஒரு சில நிமிடங்களுக்கு முன்னே உருவானவை! இன்று ஒரு கோவிலுக்கு சென்ற போது நடந்த நிகழ்ச்சியை கொண்டு எழுதியது. கோவில்களின் தத்துவம் வெறும் வெளிப்பகட்டாய் மாறிய இக்காலத்தில் இவைகளும் அவன் செயல் தான் என்பதில் எனக்கு ஐயமில்லை!!! உங்களுக்கு???
=============================================

கண்கள் வாயிலைத் துழாவ
வாயோ கவனமில்லாமல் பிதற்ற
கைகள் நாணயத்தின் ஒலிக்கேர்ப்ப பிரசாதம் கொடுக்க
மனமோ மங்கையரின் வெற்றிடங்களில் லயிக்க
நடக்குதையா ஒரு நாடகம் இங்கே!!!
எல்லாம் நீயாக இருக்க மனம் மட்டும் வேறாக இருக்க
குழப்பம் அதை நீ நடத்தி நீயே ரசிக்கின்றாயோ???
கண்கள் மூடி இருந்து பனித்து இருக்க
வாயோ நின் நாமத்தை ஓதி மௌனித்து இருக்க
கைகளோ செய்வதறியாது பிணைந்து கூப்பி இருக்க
மனமோ நின் திரு அழகில் மயங்கி இருக்க
நடக்குதையா ஒரு நாடகம் இங்கே!!!
எல்லாம் நீயாக மனமும் மாயையாக
ஆனந்தம் அதை நீ நடத்தி நீயே ஆனந்திக்கிராயோ???



Labels: