Nenjil Vandhu Senravai

Saturday, May 21, 2011

நான்! அவன்!! 

பொறிக்குள் இச்சையினால் அடைக்கப் பெற்றேன் நான்!
பொறிகளின் தன்னிச்சையால் துன்புறுகிறேன் நான்!
விரைந்திடும் காலத்தில் கரைந்திட்டேன் நான்! 
சுகம் தரும் நிரந்தர விடை தெரிந்திலேன் நான்!

நான்! நான்! என்பது என் பரு உடலா?
ஒவ்வொரு மூச்சிலும் குறைந்திடும் எனதுயிரா?
நான் மனமா? அலது என் எண்ணமா?
நான் குணமா? அலது நானே கனவா?

உளம் ஒன்றி உயிர் உருகி மனம் ஒடுங்க 
புறம் மறந்து தனை அறிந்து காலமாகி
கரம் குவித்து துதிக்கின்ற அவனே தானாகி
தரமற்ற இவ்வுடலும் அவன் இருக்கும் கோவிலாகி
பொறிக்குள் வந்தமர்ந்தான் அவன்!
பொறிகளை வசப்படுத்தினான் அவன்!
அசையாத காலமாகினான் அவன்!
நிரந்தர சுகமானான் அவன்!