New Journey
இதோ என் அருகில் எனது மரணம் !!
தொடங்கியது தனிமையில் எனது பயணம்!
பூமித் தாயின் மடியில் எனது உடலம் !
இனி என் பெயர் இவ்வுலகில் சடலம்!
நின்று நிமிர்ந்து ஓடி ஆடிய என் உடல் - இன்று
தின்று தீர்த்த கரும்பு போல் வெறும் சருகாய் !
சற்று முன் வரை என் முன் அணிவகுத்த முகங்கள்
முற்றும் கரைந்தன கனவின் சுகங்களாய் !
இதோ அடங்கின என் எண்ணங்களின் ஆர்ப்பரிப்பு!
இவ்வுடலின் பிரிவை மறுக்கும் இதயத்தின் படபடப்பு !
இன்று வரை என் ஆணைக்குட்பட்ட உடல்செயல் மறுப்பு!
முயன்று பார்த்தும் என் உதடு மறுத்தது சிரிப்பு !
கனவிலிருந்து எழுந்தேன்! இதோ வேறு ஒரு உலகம்!
முற்றிலும் புதிதாய் ! இதோ உடல் வியர்த்தேன்!
இப்பொழுதும் என் அருகில் எனது மரணம் !!