Nenjil Vandhu Senravai

Wednesday, May 1, 2013

New Journey

இதோ  என் அருகில் எனது மரணம் !!
தொடங்கியது  தனிமையில் எனது பயணம்!
பூமித் தாயின் மடியில் எனது உடலம் !
இனி என் பெயர் இவ்வுலகில் சடலம்!

நின்று நிமிர்ந்து ஓடி ஆடிய என் உடல் - இன்று
தின்று தீர்த்த கரும்பு போல்  வெறும் சருகாய் !
சற்று முன் வரை என் முன் அணிவகுத்த முகங்கள்
முற்றும் கரைந்தன கனவின் சுகங்களாய் !

இதோ அடங்கின என் எண்ணங்களின் ஆர்ப்பரிப்பு!
இவ்வுடலின் பிரிவை மறுக்கும் இதயத்தின் படபடப்பு !
இன்று வரை என் ஆணைக்குட்பட்ட உடல்செயல் மறுப்பு!
முயன்று பார்த்தும் என் உதடு மறுத்தது சிரிப்பு !

கனவிலிருந்து எழுந்தேன்! இதோ வேறு  ஒரு உலகம்!
முற்றிலும் புதிதாய் ! இதோ உடல் வியர்த்தேன்!

இப்பொழுதும் என் அருகில் எனது மரணம் !!
தொடங்கியது  தனிமையில் எனது பயணம்!
பூமித் தாயின் மடியில் எனது உடலம் !
இனி என் பெயர் இவ்வுலகில் சடலம்!

Sunday, May 13, 2012

Raama ! nin karuNai vendum

ராமா! ராமா! 
உனது அம்பு ஈரேழு மலையும் துளைக்கும்!
உனது கருணையோ ஏழேழு ஜென்மத்திலும் துணைநிற்கும்!
உனது திருநாமம் எழுதிய கல்லும் கூட கடலில் மிதக்கும்!
உனது பெயரில் ஒரேழுத்து சொனனவரும் ஆனநத்தத்தில் திளைப்பர்!
என்றெல்லாம் உன் மகிமை பாடியதெல்லாம் உண்மையோ?
மோகத்தினால் துன்புறும் என் மனதில் உன் திருநாமம் எழுதியும் 
சோகக்கடலில் அல்லவோ தத்தளிக்கிறேன்! ஏன்? எதனால்?
ஆசைமலையை வேரறுக்கும் அம்பொன்று எய்தாயானால்,
மோசமான மோகவலையில் சிக்காமல் தப்புவேனே!
ராவணனின் மறந்த்திருந்த உயிரை உன் ஒரே அம்பு பறித்தது போல
உன் பாததூளி பட்டு கல்லாய் இருந்த அகலிகை உயிர்தெழுந்தது போல 
என்னுள் மறைந்திருக்கும் மோகமாயையின் உயிரை அறுத்து 
எனது ஆன்மாவின் தன்மையை உயிர்தெழச் செய்வாயோ?
ராமா! ராமா!



Saturday, May 21, 2011

நான்! அவன்!! 

பொறிக்குள் இச்சையினால் அடைக்கப் பெற்றேன் நான்!
பொறிகளின் தன்னிச்சையால் துன்புறுகிறேன் நான்!
விரைந்திடும் காலத்தில் கரைந்திட்டேன் நான்! 
சுகம் தரும் நிரந்தர விடை தெரிந்திலேன் நான்!

நான்! நான்! என்பது என் பரு உடலா?
ஒவ்வொரு மூச்சிலும் குறைந்திடும் எனதுயிரா?
நான் மனமா? அலது என் எண்ணமா?
நான் குணமா? அலது நானே கனவா?

உளம் ஒன்றி உயிர் உருகி மனம் ஒடுங்க 
புறம் மறந்து தனை அறிந்து காலமாகி
கரம் குவித்து துதிக்கின்ற அவனே தானாகி
தரமற்ற இவ்வுடலும் அவன் இருக்கும் கோவிலாகி
பொறிக்குள் வந்தமர்ந்தான் அவன்!
பொறிகளை வசப்படுத்தினான் அவன்!
அசையாத காலமாகினான் அவன்!
நிரந்தர சுகமானான் அவன்!

Sunday, January 30, 2011

காற்றின் இன்ப சலிப்பு!

கிருஷ்ணா! உனக்கென்ன?
என் கஷ்டம் உனக்கெப்படி  புரியும்?

உன் குழல் இசையை என்னுள் மிதக்கவிட்டாய்!
கூடியுள்ள கோபியரின் காதில் படாமல்
ராதையிடம் உன் இசையைச் சேர்க்க
நான் படும் பாடு உனக்கென்ன தெரியும்?

உன் காதலுடன் கூடின மூச்சுக்காற்றை
என்னுள் பரவவிட்டாய்!
உனக்காக வாடும் கோபியரின் உடலில்
படா வண்ணம் ராதையிடம் சேர்க்க
நான் படும் பாடு உனக்கென்ன தெரியும்?

ராதை கோபமுடன் இருக்கிறாள்!
உண்ணுவதும் உறங்குவதும் மறந்தாளாம்!
நீ சில நொடிகளில் வரவில்லை என்றால்
தன உயிர் மாய்ப்பாளாம்!!

கிருஷ்ணா! என்னுடன் வந்துவிடு!
எவர் கண்ணிலும் படாமல்
ராதையிடம் சேர்க்கும் உபாயம்
எனக்கு மட்டும் தான் தெரியும்!

உங்கள் இருவரிடமும் தினம் தினம்
நான் படும் பாடு உனக்கென்ன தெரியும்??!!







Labels: , ,

Saturday, August 14, 2010

காதலாய் இறைவன்! இறைவனாய் காதல்!!

காதல் வருவதற்கு தங்கமே தங்கம்,
காலம் ஒரு தடையாய் வருமோ தங்கமே தங்கம்!
காற்றில் உன் குரல் கேட்டால் தங்கமே தங்கம்,
காதல் ஊற்று என்னுள் பெருகுதடி தங்கமே தங்கம்!
இதயம் மட்டும் அதை உணருதடி தங்கமே தங்கம்,
இறந்த பின்னும் அது வளர்ந்திடுமோ தங்கமே தங்கம்!
காதல் நமது உயிர்மூச்சு ஆனதடி தங்கமே தங்கம்,
காதல் போயின் நாம் இல்லையடி தங்கமே தங்கம்!
காதலில் நீ உண்டோ சொல்லடி தங்கமே தங்கம்,
காதலில் நானும் இல்லையடி தங்கமே தங்கம்!
கண்ணிலும் தெரியவில்லை அது தங்கமே தங்கம்,
கருத்திலும் ஒளியவில்லை தங்கமே தங்கம்!
புரியாத புதிராய் உள்ளதடி தங்கமே தங்கம்,
புரிந்தாலும் புதிராய் உள்ளதடி தங்கமே தங்கம்!
உணர்வாய் அது இருப்பதினால்  தங்கமே தங்கம்,
மனதினில் அது வளருதடி தங்கமே தங்கம்!
உணர்ந்து கடந்து நின்றால் தங்கமே தங்கம்,
அது இறைவனாய் ஆனதடி தங்கமே தங்கம்!!!

Labels: ,

Saturday, July 24, 2010

Haikoo

துளசிச் செடி
சுற்றிலும் வண்ணக்கோலம்
எல்லோரும் வணங்கிய வண்ணம்
மாடத்தில் வாடிய துளசிச் செடி!!
---------------------------------------------------------------------------------
வலி!!
70 கி.மீ வேகம்
மேலே இடித்தது பட்டாம்பூச்சி
வலித்தது என் உடலும் மனதும்!
---------------------------------------------------------------------------------
கால ஏணி!!
வாழ்க்கைப் படிகளில் ஏறுகிறோம்
என்று நினைத்து இருக்கிறோம்
காலஏணியில் வழுக்கி விழுவது தெரியாமல்!!
----------------------------------------------------------------------------------
கண்ணீர்த்துளி!!
கண்ணீர்த்துளிகள் உப்புக்கரிக்கும் என்று யார் சொன்னது?
உன்னைப்பற்றிய நினைவலைகளால் பெருகிய கண்ணீர்
எனக்கு இனிக்கின்றது!!
---------------------------------------------------------------------------------------
பொய்க்கோபம் !!
உன் பொய்க்கோபம் என்னை
சாம்பலாக்கினாலும் மீண்டும் துளிர்ப்பேன்
உன் அடுத்த அன்பு  மழையில்!
---------------------------------------------------------------------------------------
மீன்குஞ்சு !!
மழைமேகம் வெகுதொலைவில் இருந்தாலும்
என்றாவது ஒருநாள் பொழியும் என்ற காரணத்தால்
இறுகிய சகதிக்குள் புதைந்துகிடக்கிறேன் மீன்குஞ்சுகளாய்!!
---------------------------------------------------------------------------------------------
சுவாசம்!!
சுவாசிக்க நான் மறந்தாலும் இறக்க மாட்டேன்!
உன்னைப்பற்றிய எண்ணங்கள்
என் சுவாசமாக இருக்கும்பொழுது!
------------------------------------------------------------------------------------------------

Sunday, May 30, 2010

உன் கருணை எப்போதோ?

என் மனம் சலித்தது!
மனதில் எண்ணம் அலைந்தது!
எண்ணத்தில் ஆசை முளைத்தது!
ஆசையில் என் உலகம் விரிந்தது!
விரிந்த உலகம் சுருங்குமோ
முளைத்த ஆசை நசியுமோ?
அலைந்த எண்ணம் நிலைக்குமோ?
சலித்த மனம் ஆனந்தம் அடையுமோ?
உன் கருணை என்மேல் என்றோ கண்ணா?
அதுவரை எதிலும் துக்கம் தான் கண்ணா!!

Labels: ,